செய்திகள்தொழில்நுட்பம்

மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளது வட்ஸ்அப்!!

WhatsApp

வட்ஸ்அப் உலக அளவில் பல கோடி பேர் பயன்படுத்தும் கைபேசி செயலியாக உள்ளது. இதில் உள்ள குழுக்களில் தற்போது வரை 512 பேரை உறுப்பினர்களாக சேர்க்கும் வசதியுள்ளது.

விரைவில் இது இரட்டிப்பாகி 1024 ஆக உயர்த்தப்பட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இது மத்திரமின்றி வியாபாரத்தை அதிகரிக்கும் நோக்கில் ஒரே நேரத்தில் பல ஆயிரம் பேருக்கு தகவல் சென்று சேரும் வகையில் புதிய அப்டேட்களையும் வாட்ஸ்அப் அடுத்தடுத்து வெளியிட உள்ளது.

இந்த சூழலில் டெலிகிராம் நிறுவன முதலாளி அண்மையில் பேசியிருந்த கருத்து உலகம் முழுக்கவும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

வாட்ஸ்அப் திட்டமிட்டே மக்களை கடந்த 13 ஆண்டுகளாக உலவுபார்ப்பதாகவும், யாருமே அதை பயன்படுத்த வேண்டாம் என்றும் டெலிகிராம் செயலியின் தலைமை செயல் அதிகாரி பேசி இருந்தார்.

இந்த நிலையில் போட்டியை சமாளிக்கும் வகையில் டெலிகராமுக்கு போட்டியாக வாட்ஸ்அப் புதிய அப்டேட்களை செய்து வருகிறது.

ஒரு வாட்ஸ்அப் குழுவில் அதிகபட்சம் 256 பேர் மட்டுமே இருக்க முடியும் என்ற நிலையை அண்மையில் வாட்ஸ்அப் 512 ஆக உயர்த்தியது.

மேலும் இது இரட்டிப்பாக்கப்பட்டால் அனைத்து குழுக்களிலும் இன்னும் அதிகம்பேரை சேர்க்க முடியும், மேலும் கூடுதல் மெசேஜ்களும் அனுப்ப முடியும் என்பதால் புதிய அப்டேட்டை பொதுமக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button