இலங்கைசெய்திகள்

தென்மராட்சியில் விபத்து- ஒருவர் பலி!!

யாழ். தென்மராட்சி,  மட்டுவில் வடக்குப் பகுதியில் விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.  நுணாவில் சந்தி, கனகம்புளியடி வீதியில் செல்வராசா கடை அருகில் இச்சம்பவம் நடைபெற்றதாகவும் விபத்தில் ஒருவர் மரணமடைந்ததாகவும் தெரியவருகின்றது.  வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வீதியில் பயணித்த  பாதசாரியின் மீது  மோதியுள்ளது. 

நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.விபத்தில் மரணமடைந்தவர் அதே இடத்தைச் சேர்ந்த கந்தையா லோகநாதன் (லோகன்) என்பவர் என தெரியவருகிறது. மேலதிக விசாரணைகளைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 

Related Articles

Leave a Reply

Back to top button