கல்விசெய்திகள்

தென்மராட்சி மாணவர்களுக்கான ஒரு அரிய வாய்ப்பு – சாதாரண தர மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு!!

Seminar

யாழ். மாவட்ட பிரபல ஆசிரியர்களின் பங்களிப்புடன்  ஐவின்ஸ்தமிழ் செய்தி இணையதளமும் மட்டுவில் தெற்கு வளர்மதி கல்விக்கழகமும்  இணைந்து நடத்தும் இலவச பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு எதிர்வரும் 15.04.2024  மாலை 5.30  தொடக்கம்  9.30 வரை வளர்மதி விளையாட்டுகழக மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

 இக்கருத்தரங்கானது   ஓய்வுபெற்ற அதிபரும் கல்வி கழக பொறுப்பாசிரியருமான திரு.   ச. கிருஸ்ணன் தலைமையில் 6 நாட்கள் இடம்பெறவுள்ளது. 

குறித்த கருத்தரங்கில் பங்குபற்ற விரும்பும் மாணவர்கள் 077 6048940 என்ற இலக்கத்தினூடாக தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முற்றிலும் எதிர்பார்க்கை வினாக்களைத தாங்கிய இக்கருத்தரங்கில் 

தமிழ்  – தமிழ்ச்சுடர் திரு. மு.க. நித்தி ( யா /புனித பத்திரிசியார் கல்லூரி) அவர்களும் 

ஆங்கிலம் – திரு. எஸ். அனிஸ்ரன் (யா/ மத்திய கல்லூரி) அவர்களும்

விஞ்ஞானம் திரு. என். மகேந்திரன் ( அரியாலை கிழக்கு தமிழ்கலவன் பாடசாலை) அவர்களும் 

கணிதம் – திரு எஸ். மணிமாறன் ( யா /மத்திய கல்லூரி ) அவர்களும் 

வரலாறு – திரு. ஆர். ராஜராஜன் (யா / தெல்லிப்பளை மகஜனா கல்லூரி)

சைவநெறி திரு. வே. கமலேஸ்வரன் (ஆசிரிய ஆலோசகர் – தென்மராட்சி கல்வி வலயம்) அவர்களும் 

பங்கு பற்றி வழிகாட்டல்களை மேற்கொள்ளவுள்ளனர். 

இக்கருத்தரங்கிற்கு பிரணவன் அறக்கட்டளை  நிதி அனுசரணை வழங்குகின்றது . சென்ற ஆண்டும் இக்கருத்தரங்கு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button