கதைமுத்தமிழ் அரங்கம்.

மருமகளின் கைங்கர்யம்!!

Story

புதிதாக திருமணம் ஆகி வீட்டுக்கு வந்த மருமகளிடம் மாமியார் சொன்னார்

இந்த வீட்டுக்குனு சில வரைமுறைகள்
இருக்குமா..இது ஒரு அமைச்சரவை
மாதிரி..இந்தவீட்டுக்கு “முதல்மந்திரி”
உங்க மாமனார்தான்..

அவர்தான்,”பாதுகாப்புத்துறை,
“வெளியுறவுத்துறை” எல்லாம்
கவனிச்சுக்குவார்.

இங்க நான்தான் “துணை முதல்வர்”
“உள்துறை”,”நிதித்துறை”,”ஜவுளித்துறை”
எல்லாம் என் கண்ட்ரோலில்தான்
வரும்..

என் மகன்,அதான் உன் வீட்டுக்காரன்தான்
“தொழில்துறை,போக்குவரத்துறை
வீட்டுவசதி துறை”எல்லாம்
பார்த்துக்குவான்.
என்மக,உன்னோட நாத்தனார்
சிறப்புதிட்டங்கள்,”செயலாக்கதுறையும்
விளையாட்டுதுறையும் பார்த்துக்குவா.

நீ எதைப் பார்த்துக்கிற சொல்லு..
உனக்கு, “உணவுத்துறை,சுகாதாரத்துறை
குடும்பநலத்துறை” எல்லாம்
ஒதுக்கலாம்னு இருக்கேன்..
சரிதானா??

சிரித்துக்கொண்டே மருமகள்
சொன்னாள்..
“ஐயோ அத்தை பெரிய பொறுப்பெல்லாம் எனக்கு எதற்கு??
நீங்களே எல்லா நிர்வாகமும் பண்ணுங்க..நான் எதிர்கட்சி தலைவரா
மட்டும் இருந்துக்கறேன்”
அப்பதான் அடிக்கடி வெளிநடப்பு
செய்யமுடியும்..

கொய்யாலா யாருகிட்டே

நா.தை.

Related Articles

Leave a Reply

Back to top button