கதைசெய்திகள்முத்தமிழ் அரங்கம்.

மனிதாபிமானம் – நற் சிந்தனை!!

Story

 துபாயில் பணியாற்றி வந்த நண்பர் ஒருவர், விடுமுறைக்காக சொந்த ஊர் வந்திருந்தாராம்.

அவர் ஊரில் அந்த  ஹோட்டல் ரொம்ப பாப்புலர். 

அந்த ஹோட்டலுக்கு  டின்னருக்காக சென்றார். 

சாப்பிட தனக்கான உணவை ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தார்.

அப்போது ஜன்னல் ஓரம் இரு கண்கள், ஹோட்டல் அறைக்குள் எட்டிப் பார்த்தன. 

சாப்பாட்டு மேஜைகளில் நிறைந்திருந்த உணவுப் பதார்த்தங்களையும் ஏக்கத்துடன் பார்த்தன. 

அதனைப் பார்த்த அவர், 

அந்த சிறுவனை உள்ளே வருமாறு சைகை செய்தார்.

அந்தச் சிறுவன் உள்ளே வந்தான். அவனுடைய குட்டித் தங்கையும் கூட இருந்தாள். 

சிறுவனிடம் என்ன வேண்டுமென்று நண்பர் கேட்க, அவரது தட்டையே காட்டி கேட்டான் அந்த சிறுவன். 

உடனே அது போல மேலும் இரு பிளேட்டை நண்பர் ஆர்டர் செய்தார். உணவை பார்த்ததும் அந்த சிறுவன் அவசரம் அவசரமாக சாப்பாட்டில் கை வைக்கத் தொடங்கினான்.

தொடர்ந்து உணவை மிகவும் ருசித்து சாப்பிட்டுள்ளனர். 

அப்போது இருவரும் எந்த ஒரு வார்த்தையும் பேசிக் கொள்ளவில்லை.

சாப்பிட்டு முடிந்ததும், 

அந்த சிறுவன் நண்பரை பார்த்து கனிவுடன் சிரித்துள்ளான்.

பின்னர் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. 

அண்ணனும் தங்கையும் அமைதியாக ஹோட்டலை விட்டு வெளியேறியுள்ளனர்.

அதுவரை நண்பர் அந்த குழந்தைகள் சாப்பிடும் அழகை பார்த்துக் கொண்டு, 

தனது உணவில் கையை வைக்கவில்லை…

பின்னர் அவரும் சாப்பிட்டு  முடித்து விட்டு, பில் கேட்டுள்ளார். 

ஹோட்டல் ஓனர் பில்லுக்கு பதிலாக ஒரு கவரை கொடுத்து அனுப்பினார். 

அதனை பார்த்ததும் அவரது கண்கள் குளமாகின. 

பில்லில் தொகை எதுவும் எழுதப்படவில்லை. 

அதில் எழுதப்பட்டிருந்த வாக்கியம் இதுதான்…

 ”#மனிதாபிமானத்துக்கு_பில்_போட

#எங்களிடம்_இயந்திரம்_இல்லை.      

  உங்களுக்கு நல்லது நடக்கட்டும்”

என்று இருந்ததாம்.

   படித்ததில் பிடித்தது.

Related Articles

Leave a Reply

Back to top button