ஆன்மீகம்செய்திகள்

அருள்மிகு சாளம்பை முருகமூர்த்தி தேவஸ்தான வருடாந்த மஹோற்ஸவ விஞ்ஞாபனம்!!

Temple

 மல்லாகம் – கோட்டைக்காடு சாளம்பை திருப்பதியில்  கோயில் கொண்டு அருள்பாலித்து வரும் முருகப்பெருமானுக்கு நிகழும் மங்களகரமான சோபகிருது வருடம் ஆனி மாதம்,  10ம் நாள் (25.06.2023) ஞாயிற்றுக்கிழமை மு.ப 10 மணிக்கு  கொடியேற்றம் நடைபெற்று அதனைத் தொடர்ந்து 11 தினங்கள் மஹோற்சவ பெருவிழா இடம்பெற்று ( 05.07.2024) புதன்கிழமை ஆனித்திருவோண நட்சத்திரத்தன்று தீர்த்த உற்சவம் நடைபெற திருவருள் கூடியுள்ளது. 

குறித்த திருவிழாவின் மஹோற்ஸவ பிரதம குருவாக மல்லாகம் சாளம்பை முருகமூர்த்தி  தேவஸ்தான பிரதம குரு “ஸ்கந்த ஆராதனா” தத்புருஷ சிவாச்சாரியார்   சிவஸ்ரீ கிருஷ்ண  சோதீஸ்வரக் குருக்கள்  அவர்களும் தேவஸ்தான குருவாக ஊரெழு. பிரம்மஸ்ரீ சோ. சரணகீர்த்த சர்மா அவர்களும் நிகழ்வினை நடாத்தவுள்ளார்.

அத்துடன் மல்லாகம் –  பின்தாபன் குழுவினரின்  மங்கள வாத்தியமும்.மல்லாகம்  – வ. சர்வேஸ்வரனின் மிருதங்க இசையும் மல்லாகம்  – க. சபேசனின் சாத்துப்படியும்  மல்லாகம்  – ஜமுனா சவுண்ஸ் இன் ஒலி ஒளியும் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அனைத்து அடியவர்களையும் கலந்து கொண்டு முருகப்பெருமானின் ஆசிகளைப் பெறுமாறு ஆலய நிர்வாகத்தினர் அழைப்பு  விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button