ஆன்மீகம்செய்திகள்

“சைவமும் தமிழும் எமது அடையாளம்” – ஆனையிறவில் 27′ அடி உயரமான ஆதிசிவன் நடராஜர் சிலை!!

Temple

  ” நல்ல சிந்தனைகளும் நல்ல எண்ணங்களும் என்றுமே வெற்றியைத் தரும்”

ஈழதேசத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது ஆனையிறவு  மண்.  ஒரு காலம் உலகம் போற்றும்  வரலாறுகளை கொண்ட இடமாக திகழ்ந்தது . தமிழினம் கடந்த கால போரில் பல வலிகளை, துன்ப, துயரங்களை, இழப்புக்களை எல்லாம் சந்தித்து  உலகம் போற்றும் இமாலய வெற்றிகளையும் பெற்று பின்னர் யாவும் தோற்றவையாக  வெறுமையானது.  இந்த மண்ணில் இழந்த எம் உடன்பிறப்புகளை ஆத்மார்த்த ரீதியாக ஆன்மீக ரீதியில் தரிசித்து செல்வதற்கு ஆதிசிவன் இந்த புனித மண்ணில் இருந்து எம் மக்களுக்கு அருள்புரிந்து  எதிர்காலத்தில் எம் மக்களிடையே நல்ல மாற்றம் ஏற்படுவதற்கு ஒரு புனித இடமாக அமைகின்றது.

தமிழ்த் தேசியத்தின் அடையாளங்களைத் தொலைத்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்படுவதுமாக இருக்கும் நிலையில் இன்று ஏதோ ஒரு வடிவில் இந்த புனித மண்ணில் இறைவன் ஆதி சிவன் நபராஜபெருமானாக  அடையாளப்படுத்தப்பட்டு உருவகம் பெற்றுள்ளார். சைவமும் தமிழும் எமது  அடையாளங்கள்.  எமது அடையாளங்களைப் பாதுகாக்கவேண்டும் என்ற சிந்தனையில் தமிழ் மக்களுக்காக  மக்கள் பணிகளை சிறப்பாக முன்னெடுத்து வரும் யாழ்ப்பாண கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ சி.சிறீதரன் மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றும் கரைச்சி பிரதேச சபை கெளரவ தவிசாளர், கெளரவ உறுப்பினர்கள் இந்த சிலை அமைப்பதற்கு  உதவிய நல்லுள்ளங்கள், சிலை நிர்மாண பணிக்குழுவினர், என பங்கெடுத்த அனைத்து தரப்பினர்களும் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்கள். இந்த நல்லுள்ளங்கள் போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்குரியவர்கள். 

Related Articles

Leave a Reply

Back to top button