செய்திகள்தொழில்நுட்பம்

உங்கள் மொபைல் போனை ரீ ஸ்டார்ட் செய்தால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா!!

Phone

 சிறுவர்கள் முதல் பெரியவர்களை வரை இப்போது மொபைல் போன்களை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.  

அதேபோல் இந்த போன்கள் மூலம் மனிதர்களின் தினசரி வேலைகள் கூட எளிமையாகி உள்ளன. அதாவது அலுவலக மின்னஞ்சல்களைச் சரிபார்த்தல், வங்கி சார்ந்த பணிகள், பணம் செலுத்துதல், உணவை ஓடர் செய்தல், போக்குவரத்து டிக்கெட் முன்பதிவு செய்தல் போன்ற பல்வேறு விஷயங்களுக்கு இந்த போன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

எனவே அனைத்து விஷயங்களுக்கும் பயன்படும் இந்த போன்களை சரியாக இயங்க வைப்பது மிகவும் முக்கியம். அதற்கு போனை அவ்வப்போது ரீ ஸ்டார்ட் (RESTART) செய்தால் மட்டுமே நீண்ட நேரம் சரியாக இயங்கும். 

மேலும் போனை ரீ ஸ்டார்ட் செய்தால் சில பிரச்சினைகள் கூட குறையத் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் உள்ள நன்மைகள் என்னென்ன என்பதை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

கம்ப்யூட்டர் அல்லது வேறு ஏதேனும் சாதனத்தை இயக்கினால் அவற்றைப் பல முறை ரீ ஸ்டார்ட் செய்வதன் மூலம் பல பிரச்சகைைளை சரி செய்ய முடியும். குறிப்பாக வல்லுநர்கள் கூட இப்படி ரீ ஸ்டார்ட் செய்வது நல்லது என்று கூறியுள்ளனர். அதேபோல் போனை ரீ-ஸ்டார்ட் செய்வது மெமரியை க்ளியர் செய்யும். பின்பு இதனுடன் மெமரி மேனேஜ்மென்ட், நெட்வேர்க் மற்றும் பற்றரி ஒப்டிமைசேஷன் ஆகியவை சிறப்பாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

குறிப்பாக ஒரு வாரத்தில் போனை எத்தனை முறை ரீ ஸ்டார்ட் செய்ய வேண்டும் என்று பலருக்கும் சந்தேகம் இருக்கும். இதற்கு நிபுணர்கள் ஒரு வாரத்தில் போனை மூன்று முறையாவது ரீ ஸ்டார்ட் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். குறிப்பாக ஐபோன் மற்றும் எண்ட்ரொய்ட் போனைகளை ஒரு வாரத்திற்கு மூன்று முறையாவது ரீ ஸடார்ட் செய்வது நல்லது.

அதேபோல் நாம் மிகவும் சீரியஸாக நினைக்கும் ஹார்ட்வெயர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் கூட இந்த எளிதான ரீ ஸ்டார்ட் மூலம் சரியாக வாய்ப்பு உள்ளது. பின்பு உங்களது ஸ்மார்ட்போன் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதால், அதன் வேகம் குறைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே உங்களது ஸ்மார்ட்போனை அடிக்கடி ரீஸ்டார்ட் செய்வது மிகவும் அவசியம்.

இன்னும் சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால், போன்களை அவ்வப்போது ரீ ஸ்டார்ட் செய்வதன் மூலம் நீண்ட வருடங்கள் சரியாக பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் உங்களது போன் எண்ட்ரொய்ட் அல்லது ஐஓஎஸ் என்று எதுவாக இருந்தாலும் அவற்றைச் சரியாக அப்டேட் செய்ய வேண்டும்.

குறிப்பாக ஒவ்வொரு அப்டேட்டும் ஸ்மார்ட்போனுக்கு அவசியமாகிறது. அதேபோல் போனில் பயன்படுத்தப்படாத எப்ஸ்களை நீக்கிவிட வேண்டும். இத்தகைய எப்ஸ்கள் நிறைய சேமிப்பிடத்தை எடுத்துக்கொள்கின்றன. பின்பு வைரஸ் தடுப்பு செயலிகளைத் தவிர்க்க வேண்டும்.

Related Articles

Leave a Reply

Back to top button