இலங்கைசெய்திகள்

கொவிட் தொற்றிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்க மருத்துவர் ஆலோசனை!!

covid19

பாடசாலையை விட பெற்றோரிடமிருந்து சிறுவர்கள் கொவிட் தொற்றினால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் காணப்படுவதாக சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை சுவாச நோய் வைத்திய நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்று போன்றே டெங்கு நோய்க்கான அறிகுறிகளும் காணப்படுவதால், அவ்வாறான நோய் அறிகுறிகள் தமது பிள்ளைகளுக்கு காணப்படுமாயின் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு பெற்றோரிடம் கோரியுள்ளார்.

கல்வி செயற்பாடுகளை முன்னெடுப்பது மிக அத்தியாவசியமானது என்பதால் தமது பிள்ளைகளுக்கான பொறுப்புக்களை பெற்றோர்கள் நிறைவேற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், செயலூக்கி தடுப்பூசி தொடர்பில் சமூகத்தில் உள்ள தவறான கருத்துகளை பொருட்படுத்தாமல் உடனடியாக செயலூக்கி தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button