இலங்கைசெய்திகள்

வடிவேலு பாணியில் சுமந்திரன்- போட்டுத் தாக்குகின்றார் சுரேஷ்!!

suresh

“இந்திய அரசிடம் தமிழ் மக்களின் உரிமைகளை முழுமையாக பெற்றுக் கொடுப்பதற்கான வழிமுறையைப் பற்றி நாங்கள் சிந்தித்துச் செயற்படும்போது அதனைக் கேள்விக்குள்ளாக்கக்கூடிய வகையில் வடிவேலு பாணியில் சுமந்திரன் தொடர்ந்து செயற்படுவது நல்ல விடயமல்ல.”

  • இவ்வாறு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்ணணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும்படி ஆவணம் கொடுப்பது தொடர்பாகக் கடந்த சில மாதங்களாகப் பல்வேறுபட்ட அரசியல் கட்சிகள் பேச்சுளை நடத்தி ஆவணத்தைத் தயார்படுத்தி இருக்கின்றார்கள். இந்த ஆவணத்தை மிக அவசரமாக இந்தியாவுக்குத் தூதுவர் சென்றதன் காரணமாகக் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தியத் தூதுவர் வந்தவுடன் அந்த ஆவணம் கொடுக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். ஆனால், அநாகரிகமானதொரு விடயம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. சுமந்திரன் ஊடகவியலாளர்களைச் சந்திக்கின்றபோது நாங்கள் இந்த ஆவணத்தை முற்றுமுழுதாக மாற்றிவிட்டோம். இது தமிழரசுக் கட்சியினுடைய ஆவணமாக மாறிவிட்டது என்று ஒரு விடயத்தைத் தொடர்ந்து சொல்லி வருகின்றார்.

உண்மையாகவே சுமந்திரனைப் பொறுத்தவரை இந்த 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் ஆவணத்தை கொடுப்பதற்கு விரும்பவில்லை என்பது யாழ்ப்பாணத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தெளிவாகக் கூறி இருக்கின்றார். ஆனால், சம்பந்தன் உட்பட ஏனைய கட்சிகள் அனைத்தும் இப்போது 13ஜ
நடைமுறைப்படுத்தும்படி கூறும்போது வடிவேலு பாணியில் நாங்கள் மாற்றி விட்டோம் என்று சுமந்திரன் கூற ஆரம்பித்திருக்கின்றாரா என்ற கேள்வி எழுகின்றது.

உண்மை என்னவென்றால் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும்படி நாங்கள் கூறிய கோரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. அந்த ஆவணத்தில் 13ஆவது திருத்த வரலாற்றை சேர்த்திருக்கலாம். அந்த வரலாற்றைச் சேர்த்தால் கூட கோரிக்கை 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதுதான்.

ஆகவே, நாங்கள் இந்திய அரசிடம் தமிழ் மக்களின் உரிமைகளை முழுமையாகப் பெற்றுக்கொடுப்பதற்கான வழிமுறையைப் பற்றிச் சிந்தித்துச் செயற்படும்போது அதனைக் கேள்விக்குள்ளாக்கக்கூடிய வகையில் வடிவேலு பாணியில் சுமந்திரன் தொடர்ந்து செயற்படுவது என்பது நல்ல விடயமல்ல. தன்னை ஒரு புத்திஜீவியாகவும் அனைத்தும் தெரிந்தவனாகவும் கூறிக்கொண்டு இவ்வாறான கருத்துக்களை கூறுவதை விடுத்து செயற்பட வேண்டும்” – என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button