இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

ஜனாதிபதி உரையின் சாராம்சம்!!

Speech

 இன்று,.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கான விசேட உரையை சற்று முன்னர் ஆற்றினர். அதன் சாராம்சம் குறித்து 

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பொறுப்பேற்றதில் இருந்து உண்மையான தகவல் மக்கள் அறிய செய்யப்பட்டன.

உண்மையான தகவல் உங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

உண்மையான நிலைமை மற்றும் அனைவரும் ஆற்ற வேண்டிய பொறுப்புகளையும் நான் தெளிவுப்படுத்தினேன்.

பல்வேறு துன்பங்களுக்கு முகம்கொடுத்திருந்த நாம் தற்போது அதிலில் இருந்து ஓரளவுக்கேனும் எழுந்துள்ளோம்.

நாடு ஓரளவுக்கு ஸ்திரமடைந்துள்ளது.

கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்திய சரியான தீர்மதானங்கள் மற்றும் சவால்களுக்கு முகம் கொடுத்தமையே, இதற்கு காரணமாக இருந்தன.

தாய்நாட்டுக்காக இந்த சவால்களுக்கு முகம் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னும் சில காலம் இவ்வாறே கடந்த செல்வதன் ஊடாக இந்த துன்பங்களை இல்லாது செய்துக் கொள்ளலாம்.

பொருளாதாரம் முழுமையாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதை நான் பல தடவைகள் சொல்லி இருக்கிறேன்.

எதிர்கால சந்ததியினருக்காக இந்தத் தீர்மானங்களை எடுத்தே ஆக வேண்டும்.

சில குழுக்கள், பொருளாதார மற்றும் மறுசீரமைப்பினை உடைத்தெறிய முயல்கின்றன.

நாட்டை விற்பனை செய்யப் போவதக போலியான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்.

50களில் நாட்டை விற்பனை செய்யப் போவதாக சொல்லி நாட்டை குழப்பினர்கள்.

60,70,80களிலும் இந்த நிலைமை தொடர்ந்து.

இந்த குழுக்கள் தொடர்ந்தும் இவ்வாறான போராட்டங்களை முன்னெடுத்து நாட்டின் பொருளாhதாரத்தை வீணடித்தே வந்துள்ளன.

இனியும் இதில் மக்கள் ஏமாறக்கூடாது.

போட்டித் தன்மையான உலகத்துக்கு முகம் கொடுக்கும் வகையில் நமது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும்.

வங்குரோத்தடைந்த நாட்டை புதுமையாக சிந்தனைகள் ஊடாகத்தான் மீட்டெடுக்க முடியும்.

பொருளாதார மறுசீரமைப்பின் ஊடாக மக்களின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும் உயரும்.

அது நாட்டை விற்பதாகவோ, பிழையானதாவோ அமையுமா?

அனைவருக்கும் நிவாரணங்கள் வழங்கப்படும்.

அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட்டு மக்கள் மீதான சுமையும் குறைக்கப்படும்.

வினைத்திறனான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

வேகமாக முன்னேற்றமைடையும் நாடாக இலங்கை மிளிரும். இது பிழையானதா? நாட்டை விற்பனை செய்வது போன்றதா?

இந்த பயணம் இலகுவான பயணம் இல்லை.

இன்னும் பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரும். இந்த சவால்களுக்கு முகம் கொடுப்போம்.

ஓராண்டுக்கு முன்னர் நாடு இருந்த நிலைக்கே மீண்டும் நாட்டை கொண்டுச் செல்ல நாம் யாருக்கும் இடம்கொடுக்க மாட்டோம்.

𝐖𝐇𝐀𝐓𝐒𝐀𝐏𝐏 𝐆𝐑𝐎𝐔𝐏 NO 1️⃣4️⃣ 👇🏻👇🏻

“`https://chat.whatsapp.com/Be5AH8ESUizDS1owJtLHCy“` 

➖➖➖➖➖➖➖➖➖

உலகின் அதிக பணவீக்கம் கொண்ட நாடாகவும், வெளிநாட்டு கடனை திருப்பி செலுத்த முடியாத நாடாகவும், உரமின்றி விவசாயம் பாதிக்கப்பட்டு, உணவு பற்றாக்குறை, வேலைவாய்ப்பின்மை, மின்சார தடங்கல் உள்ளிட்ட பல சவால்கள் கடந்த காலங்களில் இருந்தன.

இதனால் போராட்டங்கள் இருந்தன.

அவ்வாறான நிலைமையிலேயே நான் பிரதமராக பதவி ஏற்றேன்.

நான் முதலில் நாட்டை ஸ்திரப்படுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பித்தேன்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதே இதற்கான பிரதானவிடயமாக இருக்கும் என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை நடத்தி கடனையும் பெற்றுக் கொண்டோம்.

இந்த நடவடிக்கைகளுக்கு இந்தியா பெரும் உதவிகளை வழங்கியது.

பங்களாதேஸ், பரிஸ் கழகம் , சீனா, ஜப்பான் போன்ற நாடுகளும் அமைப்புகளும் எங்களுக்கு உதவின.

அரச செலவினங்களை கட்டுப்படுத்தி நிதியை மீதப்படுத்த முடிந்தது.

இந்த ஆண்டில் 86 சதவீதம் வெளிநாட்டு பணியாளர்களின் பண அனுப்பல்கள் அதிகரித்துள்ளன.

பணவீக்கம் 25 சதவீதமாக குறைவடைந்துள்ளது.

முழு சமுகத்துக்கும் இந்த நிவாரணம் கிடைத்துள்ளது.

எமது அடுத்த நடவடிக்கைகளுக்காக நான்கு விடயங்களை மையப்படுத்தியுள்ளோம்.

`

1) அரச நிதியியல் மறுசீரமைப்பு செய்வதற்கான நடவடிக்கை – அரச செலவுகள் கட்டுப்படுத்தப்படும் – புதிய பொருளாதார கொள்கை அமுலாக்கப்படும்.

2) முதலீட்டு ஊக்குவிப்பு – ஏற்றுமதி நோக்கிய பொருளாதார உருவாக்கம், புதுப்பிக்கத்தக்க சக்திவள பயன்பாடு. தனியார்-அரச கூட்டு முயற்சிகள் பல முன்னெடுக்கப்படும். சங்காயான என்ற பெயரில் புதிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.

3) சமுக பாதுகாப்பு வலையின் உருவாக்கம் – அரச நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை ஒன்றிணைத்து சமுக பாதுகாப்பினை உருவாக்குதல். பாதிக்கப்படும் மக்களை பாதுகாத்தல், ஊழலை இல்லாது செய்தல், அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் தொடர்பாக மக்களின் கருத்தை கேட்பது ஆகிய 3 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

4) அரச நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்தல் – அரச நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வருடாந்த இலக்கு நிறைவேற்றப்படாவிட்டால், அதனை ஈடுசெய்யக்கூடிய மற்றத் தரப்புக்கு அதனை வழங்க தயங்கப்போவதில்லை.

எமது திட்டங்கள் அனைத்தையும் மக்கள் பார்த்து அறிந்துக் கொள்ள வழிசெய்யப்படும்.

நீங்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த வேலைத்திட்டம் ஊடாக முன்னேற முடியும்.

எதிர்வரும் ஐந்து வருடங்களில் நாட்டின் பொருளாதாரம் முழமையாக ஸ்திரமயப்படுத்தப்படும்.

ஐந்து வருடங்களின் பின்னர் நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பு அடுத்த சந்தத்திக்கு வழங்கப்படும்.

இதற்காக இளைஞர்கள் தயாராகிறார்கள்.

Related Articles

Leave a Reply

Back to top button