கல்விசெய்திகள்புலமைச்சிகரம் அமரர் வே. அன்பழகன் நினைவான கல்வி பகுதி

5000 மாணவர்களுக்கு மேல் பயன்பெற்ற அமரர் அன்பழகன் ஞாபகார்த்தக் கருத்தரங்கு!!

Seminar

காலஞ்சென்ற இலங்கையின் பிரபல புலமைப்பரிசில் ஆசிரியர் புலமைச்சிகரம் வே. அன்பழகன் (யாழ்.அன்பொளி கல்வி நிலைய நிறுவுனர்) அவர்களின் ஞாபகார்த்தமாக ஐவின்ஸ் தமிழ் செய்தி இணையத்தளம் மற்றும் ஐவின்ஸ்தமிழ் தொலைக்காட்சி செயற்படுத்திய தரம் 5 மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்குத் தொடரானது மிகச்சிறப்பாக .நடந்து முடிந்துள்ளது .

நாடு பூராக சுமார் 2000 இற்கு மேற்பட்ட மாணவர்கள் நேரடியாகப் பங்குபற்றியும் 150ஐ அண்மித்த பாடசாலைகளில் கருத்தரங்கில் பகிரப்பட்ட வினாத்தாள்களை மாணவர்கள் பயிற்சி செய்தும் உள்ளனர். ஏழு மாதிரி எதிரபாரப்பு வினாத்தாள்களும் ஒரு சிங்கள மொழிபெயர்ப்பு மாதிரி வினாத்தாளும் எம்மால் விடைகளுடன் பகிரப்பட்டிருந்தது.

தரம் 5 இன் முன்னணி ஆசிரியர்களான, திரு. எஸ்.தீபன் (யா/ வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை)
திரு.சண் சுதர்சன்(யா / கொக்குவில் இந்து ஆரம்பபாடசாலை)
திரு. P. பத்மநேசன்( யா/ தெ. மகாஜனா கல்லூரி )
திரு. து. திலீப்குமார் (கொ/ சென் லூசியாள் கல்லூரி)
திரு. ஆ. ஜெயநேசன் ( தி/ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி)
திரு. ஆர்.ரமணன் ( யாழ். மத்திய கல்லூரி.
திரு.எச்.எம்.எம் நிஸ்பான் ( அ/அக்.சாகிறா வித்தியாலயம்) ஆகியோர் சூம் ஊடக வளவாளர்களாக வழிகாட்டியுள்ளனர்.

அமரர் புலமைச்சிகரம் வே. அன்பழகன் ஞாபகார்த்மான இந்த வழிகாட்டல் சேவை வருடம் தோறும் தொடரவுள்ளது என்பதையும் தெரிவிக்கின்றோம்.

இந்தக் கருத்தரங்கு மூலம், அமர்ர் வே . அன்பழகன் மண்ணில் இருந்து நீங்கினாலும் அவரது ஆத்மா ஊடாக குழநரதைகளின் நம்பிக்கைக்கும் மனஉறுதிக்கும் புத்துயிர் ஊட்டப்பட்டுள்ளது.

கருத்தரங்கில் இணைந்து சிறப்பித்த மாணவர்களுக்கும் வழிகாட்டிய ஆசான்களுக்கும் நன்றிகூறுவதுடன் பெற்றோர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியை ஐவினஸ. தமிழ் தெரிவித்துள்ளது .

Related Articles

Leave a Reply

Back to top button