இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இலங்கை முற்றாக இருளில் மூழ்கும் – 27ஆம் திகதி வெளிவரவுள்ள அறிவித்தல்

கெரவலப்பிட்டிய அனல் மின் நிலையத்தின் பங்குகளை அமெரிக்காவிற்கு வழங்கும் தீர்மானத்தை கைவிடாவிட்டால் இலங்கை முற்றாக இருளில் மூழ்கும் அளவிற்கு தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்ல நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டணி தெரிவித்துள்ளது.

அத்துடன் தமது போராட்டம் தொடர்பாக எதிர்வரும் 27ஆம் திகதி அறிவித்தலொன்றை விடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் அரசாங்கம் தீர்வை முன்வைக்காவிட்டால் பாரிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு செல்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button