இலங்கைசெய்திகள்

தேசிய புத்தரிசி விழா வவுனியாவில்!!

National Buddha Festival

55வது தேசிய புத்தரிசி விழாவிற்கான அரிசியினை வழங்குவதற்காக கமநல சேவை நிலையங்களில் இடம்பெறும் புத்தரிசி விழா இன்று (21) வவுனியா கோவில்குளம் கமநல சேவை நிலையத்தில் இடம்பெற்றது.

அறுவடை செய்யப்பட்ட நெல்லின் முதற் பகுதியை புத்த பெருமானுக்கு காணிக்கையாக செலுத்தும் வருடாந்த புத்தரிசி விழா ஏப்ரல் 03ம் திகதி அக்ர சாஸ்ய ஜெயஸ்ரீ மகா போதியில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்விற்காக மாவட்ட ரீதியாக புத்தரிசி வழங்குவதற்கான விழா முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட செயலர் சரத்சந்திர மற்றும் விவசாய திணைக்கள உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், கமக்கார அமைப்பின் முக்கியஸ்தர்கள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது நான்கு மதகுருமார்களினால் புத்தரிசி வழங்கும் செயற்பாட்டினை ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

rbt
rbt

செய்தியாளர் – கிஷோரன்

Related Articles

Leave a Reply

Back to top button