செய்திகள்தொழில்நுட்பம்

புதிய அப்டேட் வெளியிட்டுள்ள மெட்டா!! 

Meta

பேஸ்புக் தளத்தில் வீடியோக்கள் சார்ந்த அம்சங்களில் புதிய மாற்றங்களை கொண்டு வந்து இருப்பதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

முன்னணி சமூக வலைதளமான  பேஸ்புக் தன்னுடைய வீடியோ சார்ந்த அம்சங்களில் புதிய மாற்றங்களை கொண்டு வந்து இருப்பதாக அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் ஹெச்டிஆர் தளத்தில் வீடியோக்கள் பதிவேற்றுவது, மற்றும் வீடியோ எடிட்டிங் டூல் ஆகியவையும் புதிய அம்சங்களில் சேர்க்கப்பட்டு இருப்பதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய அப்டேட்கள் படிப்படியாக அனைத்து பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் தளமானது வீடியோக்களை முக்கிய அம்சமாக உள்ளது, எனவே பயனர்களை வீடியோக்களை பார்க்க வைப்பது மற்றும் வீடியோ உருவாக்கத்தில் ஈடுபட வைப்பது போன்றவற்றை கருத்தில் கொண்டு புதிய மாற்றங்கள் உருவாக்கப்பட்டு இருப்பதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் முன்னர் பேஸ்புக் வாட்ச் என்று டேப் தற்போது பேஸ்புக் வீடியோ என மாற்றப்பட்டுள்ளது. இதில் சேர்க்கப்பட்டுள்ள புதிய ஷார்ட்கட்கள் குறித்த தகவல்களை பயனர்கள் விரைவாக பெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அம்சங்களை இடமிருந்து வலமாக ஸ்க்ரோல் செய்யும் போது பயனர்கள் பெற முடியும் என்றும், வழக்கமான பெர்சனலைஸ்ட் வீடியோக்களை கீழிருந்து மேலாக ஸ்க்ரோல் செய்யும் போது பயனர்கள் பார்க்கலாம் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் ரில்ஸ் வீடியோக்களை எடிட்டிங் செய்வதற்கான டூல்களையும் பயனர்கள் பெறலாம் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Related Articles

Leave a Reply

Back to top button