இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

கோட்டா கோ உணவகம் அவுஸ்திரேலியா வில் திறப்பு!!

Go Gota Go

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் பிராந்தியத்தில் Berwick நகரில் அண்மையில் திறக்கப்பட்ட விசேட வர்த்தக நிலையம் ஒன்றிற்கு ‘Go Gota Go’ என பெயர் வைத்துள்ளனர்.

இலங்கையர் ஒருவருக்குச் சொந்தமானது என கூறப்படும் குறித்த வர்த்தக நிலையம், Berwick நகரில் உள்ள இலங்கை உணவகமான அம்புல என்ற உணவகத்திற்கு அருகில் திறக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு நாடெங்கும் கோ ஹோம் கோட்டா எனும் கோஷம் உக்கிரம் பெற்றுள்ளது.

இந்நிலையில் கொழும்பு அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டக்களத்திற்கு கோட்டா கோ கம என பெயர் வைததிருந்தனர்.

இலங்கையில் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, அவுஸ்திரேலியா, இத்தாலி, பிரித்தானியா, அமெரிக்க உட்பட பல நாடுகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து இவ் வர்த்தக நிலையத்திற்கும் இவ்வாறு பெயர் வைத்தமை தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Back to top button