இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

யாழில் போதை ஊசிகளால் 10 பேர் உயிரிழப்பு!!

Drug injection

போதைப்பொருள் பயன்பாடு நாட்டின் பல மாவட்டங்களில் அதிகரித்து வருவது யாவரும் அறிந்ததே.

யாழ்ப்பாணத்தில் போதை பொருள் பயன்படுத்தி இதுவரையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,

320 பேர் வரையில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,

யாழ். போதனா வைத்தியசாலையில் போதைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மையத்தில் இரண்டு மாத கால பகுதிக்குள் 134 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களில் பெரும்பாலானோர் 18 வயதிற்கும் 23 வயதிற்கும் இடைப்பட்ட வயதுடையவர்களே என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் அதிக போதைப்பாவனைக்கு உள்ளானவர்கள் வாழும் கிராமமாக சுமார் 20 கிராமங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே யாழ்ப்பாணத்தில் அதிகரித்துச் செல்லும் இந்தப் போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கான முறையான வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு,

அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூகத்தினர் முன்வரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button