இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

உணவு உட்கொள்வதை தவிர்த்து வரும் இலங்கையர்கள் – உலக உணவுத் திட்டம்!!

World Food Programme

இலங்கையில் உள்ள ஒவ்வொரு 10 குடும்பங்களில் 04 குடும்பங்கள் போதிய உணவை உட்கொள்வதில்லை என உலக உணவுத் திட்டத்தின் சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் உணவு மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக மக்கள் உணவு உட்கொள்வதை தவிர்த்து வருவதாக உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்காலத்தில் நாட்டின் நிலைமை இன்னும் மோசமடையலாம் என உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையர்களிடையே உணவு வேளை என்பது நிச்சயமற்ற நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ள உலக உணவுத்திட்டம், நாடாளவிய ரீதியில் உணவு பொருட்களின் விலை அதிகரித்து காணப்படுவதனால் அநேகமானவர்கள் பல்வகைமை குறைந்த உணவுகளையே உட்கொள்ளும் பழக்கத்தை ஆரம்பித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button