இலங்கைசெய்திகள்

மட்டுவில் தெற்கு வளர்மதி மாதர் சங்கத்தின  2023 ம் ஆண்டுக்கான மகளிர் தின நிகழ்வு!!

Women's day

 மட்டுவில் தெற்கு வளர்மதி மாதர்களின்  மகளிர் தின நிகழ்வானது,  12. 03. 2023 இன்று ( ஞாயிற்றுக்கிழமை) பி.ப 2..39 மணிக்கு வளர்மதி விளையாட்டு அரங்கில்  வளர்மதி மாதர் அபிவிருத்திச் சங்கத் தலைவி   திருமதி. டர்சிகா அமல்ராஜ் தலைமையில் ஆரம்பமானது. 

விருந்தினர்கள் வரவேற்புடன் கோலாகலமாக ஆரம்பமாகி,  அகவணக்கம், விருந்தினர் உரைகள்,. மாதருக்கான விளையாட்டுகள் என மிகச் சுவாரஸ்யமாக  இடம்பெற்ற நிகழ்வுகள் மாலை 7 மணியளவில் நிறைவடைந்தன.

இந்த மகளிர் தின நிகழ்விற்கு எமது  இணைய தளத்துடன் இணைந்து அமரர்.   சந்திரகுமார் பிரணவன் ஞாபகாரத்தமாக அவரது உறவினர் கனடாவைச்சே்ர்ந்த சமூக ஆர்வலர் சு. செந்தூரனும்  அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

படப்பிடிப்பு – அமல் மற்றும் செந்தா

Related Articles

Leave a Reply

Back to top button