செய்திகள்விளையாட்டு

பதக்கங்களை வென்று பெருமை சேர்த்த தமிழ் மாணவர்கள்!!

Winners

 தியகமவில் நடைபெற்றுவரும் 63ஆவது கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் தமிழ் மாணவர்கள் சாதனைகளைப் புரிந்து பதக்கங்களை வென்றுள்ளனர்.

ஹாட்லி கல்லூரி வீரர் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் 23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று குண்டெறிதல் போட்டியிலும் தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

நேற்று திங்கட்கிழமை (08) பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். மாவட்டத்திற்கு ஒரு தங்கம் உட்பட 4 பதக்கங்கள்  கிடைத்தன.

இதன்படி, சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு ஒரு தங்கமும், ஒரு வெள்ளிப் பதக்கமும் யாழ். பல்கலைக்கழகத்திற்கு ஒரு தங்கப் பதக்கமும், விக்டோரியா கல்லூரிக்கு ஒரு வெள்ளிப் பதக்கமும் கிடைத்துள்ளன.

இந்நிலையில் 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாவகச்சேரி இந்து கல்லூரியின் பி. அபிஷாலினி 2.90 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தையும் கே. மாதங்கி 2.30 மீற்றர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றனர். 

யாழ். பல்கலைக்கழக வீராங்கனை என். டக்சிதா 23 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில்  3.40 மீற்றர் உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தையும்

எஸ். கிறிஸ்டிகா 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில்  2.60 மீற்றர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தையும் 

நெல்லியடி மத்திய கல்லூரி வீராங்கனை விநாயகமூர்த்தி சங்கீதா 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தட்டெறிதல் போட்டியில்  (30.48 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.

அத்துடன்,   20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டெறிதல் போட்டியில் திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி வீரர் கே. தேவமதுமிதன் (12.68 மீற்றர்) வெண்கலப் பதக்கம் வென்றார்.

கடுமையான பயிற்சியின் மூலம் இவ்வாறு பதக்கங்களைச் சுவீகரித்து , தமக்கும் பாடசாலைகளுக்கும் பெற்றோருக்கும் தமது ஊருக்கும் பெருமை சேர்த்த   மாணவர்களுகளைப் பலரும்  பாராட்டியுள்ளனர். 

Related Articles

Leave a Reply

Back to top button