சினிமாசெய்திகள்

விஜய் ரசிகர்களால் அதிரும் தமிழ்நாடு!!

vijay

தமிழ் சினிமாவில் தற்போது கொடிகட்டிப் பறக்கும் நடிகர்களில் இளையதளபதி விஜய் மற்றும் தல அஜித் ஆகியோர் உள்ளனர் .

பிரபல நடிகர் அஜித் மற்றும் பிரபல நடிகர் விஜய் ஆகியோர் நடித்துள்ள துணிவு மற்றும் வாரிசு படங்கள் எதிர்வரும் பொங்கலை முன்னிட்டு 11 ஆம் திகதி வெளிவரவுள்ளது.

இந் நிலையில் விஜய் ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் போட்டிபோட்டுக்கொண்டு மிகப் பிரமாண்டமான போஸ்டர்களை நிறுவி, வருகின்றனர். இதில் , விஜய் ரசிகர்கள் தமிழ்நாட்டில் மிகப்பெரிய போஸ்டரை ஒட்டி அதில் வருங்கால முதலமைச்சர் எனவும் வாசகங்களை அச்சடித்துள்ளனர்.

அத்துடன் முன்னால் முதலமைச்சர்களின் போட்டோக்களையும் போஸ்டரில் இணைத்துள்ளனர்.

அதில் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் 2026 வெற்றிவாகை சூடுக என தெரிவித்துள்ளனர்.

இச் செயலானது தி. மு. க மற்றும் அ. தி. மு. க. வினரை விஜய் ரசிகர்கள் சீண்டிவிட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளதாகக் கூறப்படுகின்றது .

Related Articles

Leave a Reply

Back to top button