இலங்கைசெய்திகள்

இலங்கையின் முடிவுக்கு ஐக்கிய நாடுகள் சபை வரவேற்பு!!

Srilanka

அவசரமாக இலங்கையில் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச்சட்டம் , பல கோரிக்கைகளின் பின்னர் நீக்கப்பட்டது.  இந்நிலையில், 

இலங்கையில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது.

இந்த விடயம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் – ஹம்டி, “ஐ.நா. சட்டத்தின் ஆட்சி மற்றும் அமைதியான ஒன்றுகூடல் உரிமைக்கு ஆதரவாக நிற்கிறது மற்றும் இலங்கையில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதை வரவேற்பதாகவும் 

பொருளாதார மீட்சிக்குத் தேவையான அவசர நடவடிக்கைகளில் நாடு கவனம் செலுத்த அனுமதிக்கும் நெருக்கடிக்கு ஒரு அமைதியான தீர்வை நோக்கி செயற்பட கட்சிகளை நாங்கள் ஊக்குவிக்கிறோம்” என்றும் ஹம்டி ஒரு அறிக்கையில் கூறினார்.

Related Articles

Leave a Reply

Back to top button