செய்திகள்பொருளாதார செய்திகள்

விசேட தொடருந்து சேவை – சுற்றுலா துறையை விரிவுபடுத்த திட்டம்!!

Special train service

கண்டி முதல் எல்ல வரையிலான மார்க்கத்தில் விசேட சுற்றுலா ரயில் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம்  அறிவித்துள்ளது.

இதற்கமைய இன்று முதல் தினமும் குறித்த விசேட சுற்றுலா ரயில் சேவை  முன்னெடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி ரயில் நிலையத்தில் காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்படும் குறித்த  விசேட சுற்றுலா ரயில் சேவை பிற்பகல் 2.20 க்கு தெமோதரை ரயில்  நிலையத்தைச் சென்றடையவுள்ளது.

தெமோதரை ரயில் நிலையத்தில் இருந்து மீண்டும் பிற்பகல் 3.40 க்கு  புறப்படும் குறித்த விசேட சுற்றுலா ரயில் சேவை இரவு 9.35 க்கு கண்டியை  வந்தடையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்து இந்த விசேட சுற்றுலா ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக  ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், போக்குவரத்து அமைச்சர் மற்றும் ரயில்வே பொதுமுகாமையாளர் ஆகியோரின் தலைமையில் இன்று காலை 7 மணிக்கு இதற்கான  ஆரம்ப நிகழ்வு கண்டி ரயில் நிலையத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

Related Articles

Leave a Reply

Back to top button