இலங்கைசெய்திகள்

வவுனியா ஓமந்தை மகாவித்தியாலயத்தில் திறன் வகுப்பறை பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனால் திறந்து வைப்பு!!

Smart classroom

வவுனியா ஓமந்தை மகாவித்தியாலயத்தில் 2.5 இலட்சம் ரூபா பெறுமதியான திறன் வகுப்பறையினை பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் இன்றையதினம் (20) திறந்து வைத்தார்.

பாடசாலை அதிபர் க.தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், வவுனியா வடக்கு கல்விப்பணிப்பாளர் லெனின் அறிவழகன், ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது சீன தூதுவரின் வடக்கு விஜயம் தொடர்பாக ஊடகவியாளரினால் கேட்கப்பட்ட போது பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை சுயாதீனமான சுதந்திரமான நாடு என்ற ரீதியிலும் எங்களுடைய எதிர் காலத்திற்காகவும் வெளிவிவகார உறவினை எங்களுடைய நாட்டின் பெருமைக்காகவும், தனித்தன்மைக்காகவும் பாவிக்க வேண்டியதாக உள்ளது.

இலங்கை ஒரு நாட்டின் பகடைக்காயாக மாறக்கூடாது. அண்மையில் இடம்பெற்ற சீனத்தூதுவரின் விஜயம் கேள்விக்குறியாக இருக்கிறது என்பதை விட அவர் அங்கே கூறிய கருத்துக்கள் எமக்கு கரிசனையாக இருக்கின்றது. அவை இந்தியாவையும், இலங்கையையும் பகை செய்யும் விடயங்களாக சிலர் ஊடகங்களில் சொல்லியிருக்கிறார்கள். இந்தியா எங்களுடைய தொப்புள்கொடி உறவு, எங்களுடைய உண்மையான தாய்நாடு, அங்கிருந்து வந்த மதம், மொழி எல்லாமே எங்களுக்கு சொந்தமாகியிருக்கிறது. எனவே இந்தியாவுடனான உறவை முறிவடைய விடக்கூடாது என்ற நம்பிக்கையில் நான் இருக்கிறேன். எனவே வருகின்ற நாட்களில் இவ் அரசியல் விடயம் குறித்து மிக கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

செய்தியாளர் கிஷோரன் 

Related Articles

Leave a Reply

Back to top button