இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

அரச மற்றும் தனியார் பாடசாலைகள் ஜனவரி 3 ஆம் திகதி ஆரம்பம்- 50 சதவீத மாணவர்களுடன் இன்று முதல் பல்கலைகள் ஆரம்பம்!!

schools start

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் விடுமுறைக்குப் பிறகு 2022 ஜனவரி 3 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும்.

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை 2021 டிசம்பர் 23 ஆம் திகதி ஆரம்பமாகியது.

இந் நிலையில் அனைத்துப் பாடசாலைகளுக்கும், 2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கை ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைவாக 2021 ஆம் ஆண்டின் பாடசாலைகளின் மூன்றாம் தவணை 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதியுடன் நிறைவடையும்.

■ அதேவேளை,

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி 50 சதவீத மாணவர்களின் பங்குபற்றலுடன் இன்று (29) முதல் விரிவுரைகள் உள்ளிட்ட செயற்பாடுகளை மேற்கொள்ள பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனை அறிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்களை இலக்கு வைத்து சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து துரித தடுப்பூசி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டு கொவிட் தடுப்பூசிகளும் ஏற்கனவே அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் உள்ள கல்வி மற்றும் கல்விசாரா பணியாளர்கள் மற்றும் பெரும்பாலான மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button