செய்திகள்

போராட்ட அணிகள் மொட்டுக்கட்சியின் இடைக்கால ஜனாதிபதி வேட்பாளர் டலசுக்கு !ஆதரவு…நாமலின் சூட்சியா?

Dalas support

Gota Go gama போராட்ட அணிகள் மொட்டுக்கட்சியின் இடைக்கால ஜனாதிபதி வேட்பாளர் டலசுக்கு ஆதரவு…

Gota go gama போராட்டக்காரர்கள் நாமல் ராஜபக்சவின் B team ஆ என சந்தேகம் கொள்ள வைக்கிறது சமீபத்தைய நிகழ்வுகள்… அது சந்தேகத்திற்கிடமின்றிய உண்மையாகவும் இருக்கலாம்..

தன்னை அகற்றும் வேலைத்திட்டத்தில் நாமல் ராஜபக்ச ஈடுபட்டிருப்பதை தான் அறிந்துள்ளதாக நாமலை அழைத்து கோத்தா சமீபத்தில் எச்சரிக்கை செய்தமை தொடர்பான செய்திகள் வாசிக்க கிடைத்தது அதில் உண்மை இல்லாமல் இல்லை.

கோத்தாவை அகற்றும் வேலைத்திட்டத்தில் நாமலின் பங்கு வலுவாக இருக்கிறது என்று ஆரம்பம் முதலே நம்புபவன் நான். மிரிகானயில் உள்ள கோத்தபாய ராஜபக்சவின் வீட்டின் மீது தாக்குதல் நடந்தபோதே அது நாமலின் ஏற்பாட்டில் நடந்ததாக இருக்குமென்றே நம்பினேன்.

அதன் தொடர்ச்சியாக பதவிகளை ராஜினாமா செய்யும் விளையாட்டை முதலாவதாக ஆரம்பித்து வைத்ததும் நாமல் ராஜபக்சவே. தன்னுடைய அமைச்சுப்பதவியை துறந்த நாமல் போராட்டக்காரர்களுக்கு சார்பான வகையில் சில கருத்துக்களையும் கூறி இருந்தார்.

Gota go gama போராட்டத்தின் முக்கிய ஏற்பாட்டாளர் ஒருவர் நாமல் ராஜபக்சவோடு நெருக்கமாக இருக்கும் படம் சில நாட்களின் முன்பு வெளியாகி இருந்தது அவர் ஆரம்பத்தில் நாமலின் ஆதரவாளராக இருந்ததாகவும் அமைச்சராக நாமல் பங்கேற்ற நிகழ்வில் விளையாட்டு வீரராக அவர் பங்கேற்றபோது எடுக்கப்பட்ட படம் அதுவென்று விளக்கமும் கூறப்பட்டது.

தற்போது கோத்தா வெளியேறிய நிலையில் அந்த இடத்திற்கு வந்திருக்கும் ரணிலுக்கு எதிராக Gota go gama ஆர்ப்பாட்டக்காரர்கள் தீவிரமாக போராடுகின்றனர் அதற்கு அவர்கள் கூறும் காரணம்தான் வேடிக்கையானது ரணில் கோத்தாவை காப்பாற்றிவிடுவாராம், ரணில் ஊடாக ராஜபக்ச அணி மீளவும் எழுச்சி பெற்றுவிடுமாம். ரணில் என்ன பொதுஜன பெரமுன கட்சி மெம்பரா? அல்லது ரணிலுக்கு சொந்தக்கட்சி இல்லையா? தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தன்னுடைய கட்சியை வளர்க்காமல் பொதுஜன பெரமுனவை வளர்க்கும் அளவுக்கு அரசியல் ஞான சூனியமா ரணில்?

இப்போதுதான் go gama போராட்டக்காரர்களிடமிருந்து தற்போது பூனைக்குட்டிகள் ஒவ்வொன்றாக வெளிவரத்தொடங்கியிருக்கிறது. தற்போது வந்துள்ள பூனைக்குட்டி ராஜபக்சக்களின் பொதுஜன பெரமுன சார்பாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் #டலஸ்_அலகப்பெரும போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளதால் அவரோடு இணைந்துசெயற்பட தயார் என்பது…

மேலும் சஜித் பிரேமதாச கூட டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்கும் வகையில் இடைக்கால ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகி அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்கக்கூடும்.

உண்மையை சொல்லப்போனால் கோத்தாவை அகற்றி நாமலை ராஜாவாக்கும் செயற்திட்டத்தை இடையில் புகுந்த ரணில் கெடுத்துவிட்டார். இப்போது ரணிலை அகற்றி ராஜபக்சக்களுக்கு மீண்டும் எழுச்சியை வழங்க டலஸ் வருகிறார். அவருக்கு Gota go gama அணியும் ஆதரவாம்….

Related Articles

Leave a Reply

Back to top button