இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

அபாய நிலைக்குள் இலங்கை – உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் நிலை!!

Risk of rising prices

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு அமைய அடுத்த ஆண்டு உணவு பொருட்களின் விலைகள் வெகுவாக அதிகரிக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாய துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தற்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு உடனடியாக தீர்வு வழங்கப்படாவிடில், அடுத்த ஆண்டு மார்ச் மாதமளவில் ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 200 ரூபா வரை அதிகரிக்கக்கூடும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தவிடயம் தொடர்பில் கண்டியில் நேற்று(25) ஊடகங்களுக்கு கருத்துரைத்த விவசாய திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், விவசாயத்துறை நிபுணர் கே.பீ.குணரத்ன, உரத்தட்டுபாடு காரணமாக பெரும்போக விளைச்சல் உரிய முறையில் இல்லை என தெரிவித்துள்ளார்.

நெல் பயிரிடப்பட்டுள்ள போதிலும் உரத்தட்டுப்பாடு காரணமாக பயிர்களில் வளர்ச்சி போதிய அளவில் காணப்படவில்லை.

அரசாங்கம் இதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் விவசாய திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், விவசாயத்துறை நிபுணர் கே.பீ.குணரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போது சந்தையில் பால்மா, எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றது.

அத்துடன் அவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்துரைத்த வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் ஊடாகவே அத்தியாவசிய பொருட்களில் விலை மற்றும் வாழ்க்கை செலவு என்பவற்றின் அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button