இலங்கைசெய்திகள்

கோதுமை மாவின் விலை 40 ரூபாவினால் அதிகரிப்பு!!

Price increase

 கோதுமை மாவை இறக்குமதி செய்யும் போது நிச்சயமாக அனுமதிப்பத்திரத்தை பெற வேண்டும் என நிதியமைச்சு வர்த்தமானி அறிவித்ததையடுத்து சந்தையில் இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை 40 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கோதுமை மா விநியோக நிறுவனங்களால் கோதுமை மாவின் விலை அவ்வப்போது அதிகரித்து வருவதால், புற்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் கோதுமை மாவை இறக்குமதி செய்தனர்.

அண்மைய நாட்களில் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ கோதுமை 160.00 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதோடு, மேற்படி வர்த்தமானி அறிவித்தலுடன், ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 200.00 ரூபாவாக அதிகரித்துள்ளது.

பிரிமா மற்றும் செரண்டிப் ஆகிய நிறுவனங்கள் கோதுமை தானியங்களை இறக்குமதி செய்து கொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுகங்களில் அவற்றை மாவாக்கி விநியோகிப்பதாகவும் ஒரு கிலோ கோதுமை விதைக்கு இறக்குமதிவரியாக 30 ருபாவாக இருந்தாலும் கோதுமை மா இறக்குமதியின்போது ஒரு கிலோவுக்கு 40 ருபா வரி அறவிடப்படுவதாகவும் பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button