இலங்கைசெய்திகள்

தினேஷ் பிரியந்தவுக்கு புதிய வீடு – பிரதமரினால் அன்பளிப்பு!!

New house for Dinesh Priyantha

டோக்கியோவில் நடைபெற்ற பராலிம்பில் 2020 ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கம் வென்ற தினேஷ் பிரியந்த ஹேரத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (19) புதிய வீடொன்றை அன்பளிப்பாக வழங்கினார்.

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் தலையீட்டின் கீழ் பெற்றுக்கொடுக்கப்பட்ட இவ்வீட்டிற்கான ‘அன்பளிப்பு பத்திரம்’ தங்கப் பதக்கம் வென்ற வீரர் தினேஷ் பிரியந்த ஹேரத்திற்கு அலரி மாளிகையில் வைத்து பிரதமரினால்  வழங்கிவைக்கப்பட்டது.

உலக சாதனையை நிலைநாட்டி இலங்கைக்கு தங்கப் பதக்கம் வென்றுகொடுத்த தினேஷ் பிரியந்த ஹேரத்திற்கு புதிய வீடொன்றை பெற்றுக்கொடுப்பதாக கடந்த செப்டம்பர் 8ஆம் திகதி பிரதமர் குறிப்பிட்டிருந்தார். அதற்கமைய நேற்று குறித்த வீடு வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழுள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குரிய கொழும்பு 02 கொம்பனித்தெருவில் அமைந்துள்ள மெட்ரோ ஹோம்ஸ் வீடமைப்பு திட்டத்தின் 40 ஏ 4/10 இலக்க வீடு தினேஷ் பிரியந்த ஹேரத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Back to top button