இலங்கைசெய்திகள்

மாகந்துரே மதுஷின் நெருங்கிய நண்பரான குடு ரொஷான் குத்திக் கொலை!!

merder

ஹிக்கடுவை – மில்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ரொஷான் டி சில்வா கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு ரொஷான் டி சில்வாஎனப்படும் குடு ரொஷான் நண்பர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற விருந்தொன்றில் கலந்துகொள்வதற்காக ஹிக்கடுவைக்கு சென்றிருந்த போது இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மாகந்துரே மதுஷின் நெருங்கிய நண்பர் என்பதுடன் கொலை சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button