இந்தியாசெய்திகள்முக்கிய செய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான சாந்தனின் உருக்கமான கடிதம்!!

Santhan letter

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று தற்போது விடுதலை செய்யப்பட்ட நிலையிலும் சிறையில் வாழும் சாந்தன் உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 “32 ஆண்டுகளாக நான் என் அம்மாவைப் பார்க்கவில்லை” என  அவர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரில் இலங்கையைச் சேர்ந்த டி.சுதந்திரராஜா என்ற சாந்தனும் ஒருவர். இவர் நவம்பர் 11, 2022 அன்று இந்திய உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

ஆனால் இவரும், இவருடன் விடுவிக்கப்பட்ட முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் அனைவரும் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சாந்தன், சிறப்பு முகாமுக்குள் நடக்கும் தனது வாழ்க்கையைப் பற்றி எழுதியுள்ள கடிதத்தில்  “சூரிய ஒளி கூட எங்களின் உடலைத் தொடாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் தனக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும். அப்போதுதான் தான் சொந்த நாட்டிற்கு திரும்ப முடியும் எனவும்  அடையாளச் சான்றினை புதுப்பித்துக் கொள்ள சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை அணுகியதாகவும்  அதற்கும் அவர்களிடமிருந்து பதில் இல்லை எனவும் தெரிவித்துள்ள அவர்,  

கடந்த 6 மாதங்களாக திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளேன். சிறப்பு முகாமில், 120 க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர்  வசிக்கின்றனர், அவர்களில் 90 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள், ”என்றும் அக்கடிதத்தில் கூறப்பிட்டுள்ளார். 

இங்கு,  தமிழர், சிங்களவர், முஸ்லிம் என்ற பாகுபாடு கிடையாது.ஆனாலும் 

“ராஜீவ் காந்தி வழக்கில் விடுவிக்கப்பட்ட நாங்கள் நான்கு பேர், ஜன்னல்கள் தகரத் தாளால் மூடப்பட்ட அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளோம்” என்றும் அவர் தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.

மேலும் , “ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஒரு அறையில் இருக்கும்போது, ​​​​நானும் முருகனும் மற்றொரு அறையைப் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால் எங்கள் அறைகள் ஒன்றுக்கொன்று அருகில் இல்லை. எங்களால் ஒருவரையொருவர் பழகவோ பேசவோ  முடியாது என்றும் 

இரத்த உறவினர்கள் மட்டுமே கைதிகளைச் சந்திக்க முடியும் என்ற நிலையில்,  “என்னைப் போன்ற ஒரு வெளிநாட்டவருக்கு, இந்தியாவில் இரத்த உறவினர் எப்படி இருக்கும்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.  நாள் ஒன்றுக்கு ரூ.175 வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளதுடன்,

“32 வருடங்களாக நான் என் அம்மாவைப் பார்க்கவில்லை,  எனது தந்தையின் கடைசி ஆண்டுகளில் என்னால் அவருடன் இருக்க முடியவில்லை. என் அம்மாவின் கடைசி நாட்களிலாவது அவருடன் இருக்க வேண்டும் என்பது எனது ஆசை ”என்றும் அவர் தனது கடிதத்தில் உருக்கமாக எழுதியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button