இலங்கைசெய்திகள்

கிளிநொச்சி மகா வித்தியாலய அணி வரலாற்றுச் சாதனை!!

Kilinochchi Maha Vidyalaya Team

கிளிநொச்சி மகா வித்தியாலய அணி, வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியின் இறுதியாட்டத்தில் வெற்றிவாகை சூடிக்கொண்டது.

இந்தப் போட்டி தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

18 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான இறுதியாட்டத்தில் கிளிநொச்சி மகா வித்தியாலய அணியை எதிர்த்து அராலி சரஸ்வதி மகா வித்தியாலய அணி மோதியது.

முதல் பாதியாட்டத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிளிநொச்சி மகா வித்தியாலய அணி 12:6 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தனர்.

இரண்டாவதாக பாதியாட்டத்தில் உத்வேகத்துடன் களம் இறங்கிய அராலி சரஸ்வதி மகா வித்தியாலய அணி வெற்றிக்காக போராடி ஆட்டத்தை சமநிலைப்படுத்தியது.

இருப்பினும் இறுதிநிமிடத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிளிநொச்சி மகா வித்தியாலய அணி 18:17 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுச் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டனர்.

வடக்கு கிழக்கு மாகாணம் பிரிந்த பின்னர் சம்பியன் கிண்ணம் யாழ்மாவட்ட பாடசாலைகளுக்கே உரித்தானதொன்றாகியது.

இதனை இவ்வாண்டு நடைபெற்ற போட்டியில் கிளிநொச்சி மகா வித்தியாலய அணி வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்தது. மேலும் 3ம் இடத்தை நானாட்டான் டிலாசா மகா வித்தியாலய அணி பெற்றது.

Related Articles

Leave a Reply

Back to top button