Breaking Newsஇலங்கைசெய்திகள்

இன்டர்போலின் சிவப்பு பட்டியலில் இலங்கையர்கள்!

Interpol

 இன்டர்போலின் சிவப்பு அறிவிப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள தப்பியோடிய 6,872 பேரில் இலங்கையர்களும் உள்ளடங்குவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏழு பேரில், நான்கு இலங்கையர்கள் ‘இலங்கையில் தேடப்படுபவர்கள்’ என்று பட்டியலிடப்பட்டுள்ளனர், 

ஏனைய மூன்று இலங்கையர்கள் தங்கள் பிரதேசங்களில் செய்த குற்றங்கள் தொடர்பாக வெளிநாடுகளால் செய்யப்பட்ட கோரிக்கைகளின் பேரில் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இன்டர்போலின் சிவப்பு அறிவிப்பு என்பது, நாடுகடத்தப்படுதல், சரணடைதல் அல்லது அதுபோன்ற சட்ட நடவடிக்கை நிலுவையில் உள்ள ஒருவரைக் கண்டுபிடித்து, கைது செய்ய, உலகெங்கிலும் உள்ள சட்ட அமுலாக்க அதிகாரிகளிடம் கோருவதாகும்.

இதனடிப்படையில், இன்டர்போல் தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, தேடப்படும் நால்வர் கொஸ்கொட சுஜீ ( 38), நடராஜா சிவராஜா (49), முனிசாமி தர்மசீலன் (50), மற்றும் விக்னராசா செல்வந்தன் (35 )ஆகியோராவர்.

இந்நிலையில் கொலை வழக்கு தொடர்பில் கொஸ்கொட சுஜீக்கும், மறைந்த அமைச்சர் லக்ஷ்மன் கதிரகாமரின் கொலைக்கு உதவிய நடராஜா சிவராஜாவுக்கும் இந்த சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தர்மசீலன் இரண்டு கைக்குண்டுகள் மற்றும் 200 ரவைகளை வைத்திருந்ததற்காக தேடப்பட்டு வரும் நிலையில், செல்வந்தன் மீது திருட்டு மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதற்கிடையில், மற்ற மூன்று இலங்கையர்கள் பற்றிய தகவல்களை இன்டர்போல் கண்டுபிடித்து வருகிறது.

அதன்படி, நவநீதன் கொலைச் சம்பவம் தொடர்பில் ருமேனியாவினால் தேடப்படும் வவுனியாவைச் சேர்ந்த குமாரசாமி, போலி நாணயத்தாள்கள் தொடர்பில் இந்தியாவினால் தேடப்படும் அலபொடகமவைச் சேர்ந்த 61 வயதான மொஹமட் பௌமி, கனடாவால் தேடப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணிக்கவாசகர் விஜயராஜா (41) ஆகியோர்களே தேடப்படுகின்றார்கள்.

மேலும் ஐந்து இலங்கையர்களுக்கு சர்வதேச பொலிஸார் மஞ்சள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். காணாமல் போனவர்கள், பெரும்பாலும் சிறார்களைக் கண்டறிவதற்கு அல்லது தங்களை அடையாளம் காண முடியாத நபர்களை அடையாளம் காண்பதற்கு மஞ்சள் அறிவிப்புகள் வழங்கப்படுகின்றன.

அதன்படி, 31 வயதான பாலகிருஷணன் நிரேஷ் என்பவர் வவுனியாவில் 2002 ஜனவரி 27 இல் காணாமல் போனதையும், 68 வயதாக வீபத்தே ரலலகே சமன் விஜேசிறி என்பவர் 2018 ஒக்டோபர் 13 இல் காணாமல் போனதையும் சர்வதேச காவல்துறையினர் பட்டியலிட்டுள்ளனர்.

20 வயதான கயிந்து கித்முக மதுரப்பெரும என்பவர் தனது 5ஆவது வயதில் கொழும்பில் காணாமல் போயுள்ளார்.

பொதுவாக காணாமல் போனவர்களை, பெரும்பாலும் சிறார்களைக் கண்டறிய உதவுவதற்காக அல்லது அடையாளம் காண முடியாதவர்களை கண்டறிய உதவுவதற்காக மஞ்சள் அறிவிப்புகள் வழங்கப்படுகின்றன. 

Related Articles

Leave a Reply

Back to top button