சினிமாசெய்திகள்

அருள்நிதியின் ‘D பிளாக்’ டிரைலர்!!

"D" block

அருள்நிதி நடிப்பில் உருவாகிய படத்தின் ‘D பிளாக்’ ட்ரெய்லர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தனக்கு பொருத்தமான கதையை தேர்வு செய்து தொடர்ச்சியாக வெற்றி படங்களில் நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் அருள்நிதி. இவர் நடிப்பில் உருவாகிவரும் ‘D பிளாக்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இன்ஜினியரிங் கல்லூரி ஹாஸ்டலில் நடக்கும் சில திகில் சம்பவங்கள் மற்றும் அந்த திகில் சம்பவங்களுக்கு காரணம் என்ன என்பதை கண்டுபிடிப்பதுதான் இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது. அருள்நிதி ஜோடியாக அவந்திகா நடித்துள்ள இந்த படத்தில் கருபழனியப்பன், தலைவாசல் விஜய், ரமேஷ் கண்ணா, உமா ரியாஸ், மொட்ட ராஜேந்திரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விஜயகுமார் ராஜேந்திரன் என்பவர் இயக்கத்தில் ரான் யதான் யோஹன் இசையில் அரவிந்த் சிங் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த படம் அருள்நிதிக்கு மேலும் ஒரு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button