உலகம்செய்திகள்

அவசரகால சட்டம் கனடாவில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது!!

Canada

கனடாவில் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க, கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதுடன், பொது இடங்களில் நடமாடுவோர், பொது போக்குவரத்தில் பயணிப்போர் தடுப்பூசி சான்றிதழை கொண்டிருப்பதனையும் கனடாவில் அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.

பாரவூர்தி சாரதிகளுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரவூர்தி சாரதிகள், தலைநகர் ஒட்டாவாவில் உள்ள பிரதான வீதிகளில் பாரவூர்திகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அமெரிக்கா – கனடா இடையிலான வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், போராட்டத்தை ஒடுக்கும் விதமாக நாடு முழுவதும் அவசரகால நிலை சட்டத்தை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

1970ஆம் ஆண்டுக்கு பிறகு கனடாவில் அவசரகால சட்டம் அமுலுக்கு வந்துள்ளதுமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Leave a Reply

Back to top button