உலகம்செய்திகள்முக்கிய செய்திகள்

அமசோன் காட்டில் சிறார்களை உயிருடன் மீட்ட குழுவுக்கு உயரிய விருது!!

Award

 கொலம்பியாவில் (Colombia) உள்ள அமசான் (Amazon) காட்டில் நேர்ந்த விமான விபத்தில் காணாமல் போன 4 பழங்குடியினப் பிள்ளைகளை 40 நாள்களுக்குப் பிறகு உயிருடன் மீட்ட ராணுவ வீரர்களுக்கும் பழங்குடியின மக்களுக்கும் உயரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த நிகழ்வு போகோட்டாவில் (Bogota) நடைபெற்றது.ராணுவ வீரர்களுக்கும் பழங்குடியின மக்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பைப் பாரட்டிய கொலம்பிய அதிபர் குஸ்டாவொ பெட்ரோ (Gustavo Petro) “Operation Hope” என்றழைக்கப்பட்ட மீட்புக் குழுவினருக்குப் பதக்கங்கள் வழங்கினார்.

ஆயுதப்படையில் வழங்கப்படும் 2ஆவது மிக உயரிய விருதை அவர்கள் பெற்றனர்.விழாவில் “Wilson” என்ற ராணுவ மோப்ப நாயின் தாயான “Drugia” என்னும் நாயும் கௌரவிக்கப்பட்டது.காணாமல் போன பிள்ளைகளைத் தேடுவதற்கு உதவிய “Wilson” மோப்ப நாயைக் காணவில்லை. அதனைத் தேடும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.அந்த நாயின் உதவியை நினைவுகூற நினைவுச்சின்னம் கட்டப்படவுள்ளது.

கடந்த மே முதல் தேதி அமசான் காட்டில் விமானம் விபத்துக்குள்ளானது. அப்போது காணாமல் போன 13, 9, 5, 1 வயதிலான 4 பிள்ளைகள் ஜூன் 9ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டனர்.அவர்களைத் தேடி மீட்க ஹெலிகாப்டர்கள், செயற்கைக்கோள்கள், பிள்ளைகளின் பாட்டியுடைய குரல் பதிவைக் கொண்ட ஒலிப்பெருக்கிகள் முதலியவையும் பயன்படுத்தப்பட்டன.மீட்கப்பட்ட பிள்ளைகள் ராணுவ மருத்துவமனையில் உடல் நலம் தேறி வருகின்றனர்.பிள்ளைகளின் கதையை ஆவணப்படமாக்கும் முயற்சிகளும் நடைபெறுவதாக கொலம்பிய அரசாங்கம் கூறியது.

Related Articles

Leave a Reply

Back to top button