இலங்கைசெய்திகள்

சஹ்ரானின் படத்தை தொலைபேசியில் வைத்திருந்த 9 இளைஞர்கள் கைது!!

Arrested

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் சம்பவத்தின் பிரதான
சூத்திரதாரி சஹரான் ஹஷீமின் படங்கள் உள்ளிட்டவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் 9 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு-கொழும்பு வீதி ரிதிதென்னை பொலிஸ் சோதனைச் சாவடியில் அக்குரனையில் இருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த வாகனம் ஒன்றை இன்று (12) இராணுவத்தினர் சோதனையிட்டபோது கையடக்க தொலைபேசியில் சஹரான் ஹஷீம் படங்கள் உள்ளிட்டவையை வைத்திருந்ததையடுத்து குறித்த இளைஞர்கள் கைது Pm செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து கைதான 9 பேரையும் கைது செய்து விசாரணைக்காக வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவமுகாமிற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அக்குரனையில் இருந்து காத்தான்குடி நோக்கி வேனில் பயணித்த சந்தேக நபர்களை வீதிச்சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இராணுவத்தினர், கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளார்களா என்று கேட்டு விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன்போது அதில் பயணித்த முகமட் பாரூக் முகமட் ஆசாத் என்பவர் தனது கையடக்க தொலைபேசியில் தடுப்பூசி ஏற்றியதற்கான அட்டையின் படத்தை காட்ட முற்பட்டார். இதன்போது கையடக்க தொலைபேசியில் உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹஷீமின் படங்கள் உள்ளிட்டவையை வைத்திருந்ததை கண்டுள்ள இராணுவத்தினர் அவருடன் பிரயாணித்த 9 பேரையும் தடுத்தி நிறுத்தினர்.

இதனையடுத்து குறித்த சந்தேகநபர்கள் வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ முகாமிற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button