இலங்கைசமீபத்திய செய்திகள்

புது வகையான ஒரு பெற்றோல் மோசடி !பெற்றோல் நிரப்பும் அனைவரும்
அவசியம் படிக்க வேண்டியது !

Petrol

மோசடிகளுக்கு மத்தியில் நாம்…….

அண்மைய நாட்களாக நாம் பெற்றோல் full tank அடிப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமைந்திருக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அப்படியிருந்தும் ஒரு சிலர் full tank பெற்றோல் அடித்திருப்பார்கள் அனால் எவ்வளவு பெற்றோல் அடித்தார்கள் என்பது பற்றி சிந்தித்திருப்பதற்கு வாய்ப்பு இல்லை. சிந்திப்பதற்கும் நாட்டு நிலைமையும் அவகாசம் கொடுக்கவில்லை.

இவ்வாறான சூழ்நிலைகளை பயன்படுத்தி ஒரு சில பெற்றோல் செட் உரிமையாளர்கள் பாரிய மனிதநேயமற்ற மோசடிகளில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அண்மையில் தனது காரிட்கு பெற்றோல் பெற சென்ற வைத்தியர் ஒருவராலேயே இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.

குறித்த தினத்தில் தனது காரில் ஏற்கனவே இருப்பில் இருந்த எரிபொருள் அளவை நன்கறிந்த வைத்தியர் குறித்த பெற்றோல் செட்டில் தனது காரிட்கு பெற்றோல் போட முன்னுரிமை அடிப்படையில் சென்றுள்ளார் வைத்தியர் என்றபடியால் தடையின்றி எரிபொருள் விநியோகிக்கப்பட்டது அங்குதான் பெற்றோல் செட் உரிமையாளர் சிக்கியுள்ளார். ஏற்கனவே தனது காரில் இருந்த பெற்றோல் அளவினை நன்கறிந்த வைத்தியர் தனது காரிட்கு full tank அடிக்க மேலும் இத்தனை லீட்டர் பெற்றோல் போடவேண்டும் என மனக்கணக்கு போட்டு வைத்திருந்திருக்குறார் அதில் மண்ணை அள்ளி போட்டனர் பெற்றோல் செட் ஊழியர் அதாவது அவர் எதிர்பார்த்த அளவுக்கு மேலதிகமாக பெற்றோல் மீட்டர் ஓடிக்கொண்டிருந்தது இதை அவதானித்த வைத்தியர் அசந்து போய்விட்டார் தனது கார் பெற்றோல் டேங்க் எப்படி கொள்ளளவு கூடியது என்று.
ஆச்சரியம் கலந்த சந்தேகத்துடன் குழப்பமடைந்த வைத்தியர் தனது சந்தேகத்தினை எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரிடம் தெரிவித்தார். அதாவது எனது கார் 32 லிட்டர் டேங்க் உள்ளது ஏற்கனவே அதில் 15லிட்டர் இருந்தது அனால் இன்று நீங்கள் அண்ணளவாக 19 லிட்டர் அடித்துள்ளீர்கள் அது எவ்வாறு சாத்தியம் என வினவியுள்ளார் தான் தற்போது எரிபொருள் நிலையத்திற்கு வருவதற்கு அவ்வளவு பெற்றோல் போயிருக்க வாய்ப்பில்லை என கணிப்பீட்டு குறிப்பிட்டார்.
இதனால் குழப்பமடைந்த வைத்தியர் பொலிஸிடம் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்தார். அதனடிப்படையில் பொலிஸார் 1லிட்டர் போத்தலில் பெற்றோல் அடித்து பரிசோதித்த போது 950மில்லி பெற்றோலே அங்கு காணப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக வைத்தியர் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் மீது மோசடி வழக்கினை நீதிமன்றில் பதிவு செய்துள்ளார்(இச்செய்தி தணிக்கப்பட்டது ). ஒரு லிட்டர் கு 50மில்லி என்ற வகையில் பெற்றோல் பம்பில் செட்பண்ணியிருந்தது அம்பலமானது.

இவ்வாறான மோசடிகள் எமக்கு புதியவை ஆனால் உலகில் பல நாடுகளில் இது கண்டுபிடிக்கப்பட்டு பல நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்ட வரலாறு உண்டு.

அது எவ்வாறு சாத்தியம் என நினைப்பீர்கள் இதோ முழு விளக்கம்.

ஒருங்கிணைந்த சில்லுகளைப் பயன்படுத்தி எரிபொருள்-விநியோக இயந்திரங்களை மாற்றுதல்

பெட்ரோல் பம்புகளின் முக்கிய உரிமையாளர்கள் அல்லது மேலாளர் மட்டத்தில் இருந்து இது ஒரு தெளிவான மோசடியாகும், ஏனெனில் இந்த மோசடியில் – ஒரு ஒருங்கிணைந்த சிப் இயந்திரத்தில் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிப் ஒவ்வொரு முறையும் 5% குறைவான எண்ணெய் நிரப்பப்படுவதை உறுதி செய்கிறது, அதே நேரத்தில் மீட்டர் முழு அளவைக் காட்டுகிறது. எனவே 1000 ரூபா பெட்ரோல் கேட்டால் எல்லாம் சரியாகத் தெரியும் ஆனால் 950 ரூபா மதிப்புள்ள பெட்ரோல் மட்டுமே கிடைக்கும்.
முழுத் தொகைக்கும் ரசீது கூட உருவாக்கப்படும். இது ஒரு சிறிய மாற்றமாகும், இது இயந்திரத்திலேயே செய்யப்படுகிறது. இது பெற்றோல் பம்பில் ஒரு சிப் வகையான ஒரு பொறியை பொருத்துவதன் மூலம் மாற்றம் செய்யப்படுகின்றது.

தற்போது நாம் பெற்றோல் அடிக்கும் போது எவ்வளவு பெற்றோல் அடிக்கப்படுகின்றது என அளக்கமுடியாத சூழ்நிலை இருக்கின்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இவ்வாறான மோசடிகள் இடம்பெறுகின்றன.

சாதாரணமாக ஒருவர் தனது வாகனத்திற்கு பெற்றோல் இட்ட பின்னர் அதில் இடப்பட்ட அளவு குறித்து விவாதிப்பதற்கு அருகதியற்றவர் ஆவர் (சட்டத்தின் படி).
இதை கண்டுபிடிக்க அளவு கேன்களில் நிரப்பினால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் அனால் அதற்கும் தற்போது வாய்ப்பில்லை. இதுவே மோசடி கும்பல்களுக்கு வரப்பிரசாதமாக அமைகின்றது.

சாதாரணமாகவே எம்மவர்கள் பழம்திண்டு கொட்டை போட்டவர்கள் இவ்வாறான மோசடிகளில் கைதேர்ந்தவர்கள்( அனைவரும் அல்ல) எனவே எந்த வகையான மோசடி தந்திரத்தினை கையாளுகிறார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே வெளிச்சம்.

நாமும் பெற்றோல் அடிக்கும் போது மீட்டர் அளவை மட்டுமே அவதானிக்கின்றோம் ஆனால் எவ்வளவு பெற்றோல் அடிக்கப்பட்டது என்று பார்ப்பதில்லை ( சாத்தியமும் இல்லை).

அண்மைய காலமாக பெற்றோல் மைலேஜ் தருவதில்லை என்ற முறைப்பாடு பலரது வாய்களில் இருந்து கேட்கக்கூடியதாக உள்ளது அதற்கு இதுவும் ஒரு காரணமோ தெரியாது.

ஏற்கனவே இன்னல்களை அனுபவிக்கும் மக்களுக்கு மேலும் இவ்வாறான மோசடி செயற்பாடுகள் எரியுற விளக்கில் எண்ணை ஊற்றுவது போல் அமைகின்றது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாமாக முன்வந்து வழங்கப்படும் எரிபொருள்களின் அளவினை திடீர் பரிசோதனையின் மூலம் உறுதிசெய்து வெளிப்படுத்தும் பட்ச்சத்தில் மக்களை மோசடி கும்பல்களிடமிருந்து காப்பாற்ற முடியும்.

Related Articles

Leave a Reply

Back to top button