இலங்கைசெய்திகள்பிரதான செய்திகள்

காட்டுச் சட்டத்தால் நாட்டை ஆள முடியாது! – சஜித் விளாசல்

(நமது விசேட செய்தியாளர்)

“ஒரு நாட்டை காட்டுச் சட்டங்களால் ஆள முடியாது. அதற்காக ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.”

-இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

“ஜனநாயக ரீதியான வெற்றிக்காக நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியேயுள்ள பரப்புகளிலும் தொடர் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் ஊடாக மக்களுக்கான வெற்றிகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்” எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல தரப்பு பிரதிநிதிகள் மற்றும் கட்சித் தலைவர்களுடன் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடத்திய கலந்துரையாடலின்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கூறினார்.

குறிப்பாக 21 ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு, அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் தடைகள் மற்றும் சமன்பாடுகள் ஊடாக ஜனநாயகத்தை ஸ்தாபிப்பதே தமது ஒரே நோக்கமாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல தரப்பினரும் எதிர்க்கட்சித் தலைவரிடம் முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தனர்.

குறித்த சகல முன்மொழிவுகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது உறுதியளித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button