இலங்கைசெய்திகள்

வவுனியாவில் உலக எய்ட்ஸ் தின ஊர்வலம்!!

World AIDS Day

வவுனியாவில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு வாகன ஊர்வலம் இன்று (01) இடம்பெற்றது.  
உலக எயிட்ஸ் தினம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி நினைவு கூரப்படுகிறது. அந்தவகையில் இலங்கையில் இம்முறை சமத்துவமின்மையை ஒழிப்போம், எயிட்ஸ்சை ஒழிப்போம், பெருந்தொற்றை ஒழிப்போம் எனும் தொனிப்பொருளில் அனுஸ்டிக்கப்படுகின்றது.   


இதனையடுத்து எயிட்ஸ்நோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று  வவுனியா பொது வைத்தியசாலையின் மாவட்ட பாலியல் நோய் தடுப்பு பிரிவின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்றது. 
வவுனியா பொது வைத்தியசாலையில் இருந்து ஆரம்பமான  ஊர்வலம் குருமன்காட்டுசந்தி ஊடாக, வைரவபுளியங்குளம் சென்று, வவுனியா நகரம் ஊடாக மீண்டும் வைத்தியசாலையை வந்தடைந்தது. 
இவ்விழிப்புணர்வு ஊர்வலத்தில் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம், சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டருந்தமை குறிப்பிடத்தக்கது,  


முன்னதாக காலை10 மணிக்கு வவுனியா வைத்தியசாலையில் எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு ஒன்றும் நடைபெற்றிருந்தது. குறித்த செயலமர்வில் வைத்தியசாலை பணிப்பாளர் இ. ராகுலன், விசேட வைத்திய நிபுணர் இளங்குமரன், மற்றும் வைத்தியர்கள் தாதிய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


செய்தியாளர் கிஷோரன்

Related Articles

Leave a Reply

Back to top button