இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

“நாட்டை நிர்வகிக்க முடியவில்லை என்றால் கையளித்து விட்டு செல்லுங்கள்”

நாட்டை நிர்வகிக்க முடியவில்லை என்றால் திருப்பி கையளித்து விட்டு செல்லுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் சுயத்தொழிலில் ஈடுபடும் பெண்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயு, பால் மா உட்பட ஏனைய அத்தியவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த அமைப்பினர் நூதன போராட்டமாக கொழும்பு புறக்கோட்டையில் உள்ள குணசிங்க சிலை அருகில் இன்று பாற்சோறு தானம் வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

தொடர்ந்தும் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவை தாங்கி கொள்ள முடியாது எனவும் இதன் காரணமாக குடும்பங்களுக்குள் பெரிய நெருக்கடிகளை ஏற்பட்டுள்ளதாக குறித்த அமைப்பை சேர்ந்த பெண்கள் கூறியுள்ளனர்.

சரியாக நாட்டை நிர்வகிக்க முடியாது என்றால், தயவு செய்து நாட்டை மீண்டும் ஒப்படைத்து விட்டு செல்லுமாறு இந்த பெண்கள் ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button