இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அபாய எச்சரிக்கை!!

Warning

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நிலைமையினால் திருட்டு, கொள்ளை போன்ற துர்ப்பாக்கிய நிலைமை அதிகரித்துள்ளதால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஒலிபெருக்கி ஊடாக பொலிசார் மக்களுக்கு எச்சரிக்கை வழங்கும் செயற்பாடு அனைத்து இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மக்கள் வீடுகளில் இரு்ககும் போது, கதவு, ஜன்னல்களை பூட்டிவிட்டு வீட்டிற்குள் அவதானமாக இருக்கமாறும் வாகனங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வெளிநபர்களை வீடுகளுக்குள் அனுமதிக்க வேண்டாம். உதவி கேட்டு, மின்சாரத் தடை தொடர்பில், அல்லது அதிகாரிகள் என கூறி வீடுகளுக்கு வரும் நபர்கள் தொடர்பில் அவதானமாக இருங்கள்.

நகைகள் அல்லது பெறுமதியான பொருட்களுடன் வெளியே நடமாடுவதனை தவிர்க்க வேண்டும். இரவு நேரத்தில் வீடுகளின் பாதுகாப்பினை உறுதி செய்துக் கொள்ளுங்கள்.

கையடக்க தொலைபேசியின் EMI இலக்கத்தை பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டில் இருந்து வந்த நபர்கள் அவதானமாக இருங்கள்.

உங்களுக்கு பெறுமதியான பரிசு வெளிநாட்டில் இருந்து வந்துள்ளதாக கூறி வரும் நபர்களை வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம்.

பேருந்துகளில் புதிய நபர்கள் பழக்கம் ஏற்படுத்த முயற்சித்தால் அதனை தவிர்த்துக் கொள்ளுங்கள். பேருந்தில் பைகள் வழங்கினால் பெற்றுக் கொள்வதனை அறவே தவிர்த்து அவதானமாக இருங்கள்.

நீங்கள் ஏமாற்றப்படலாம். ஏமாற்றுக்காரர்களினால் குறி வைக்கப்படலாம் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button