இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவைச் சேர்ந்த பெண்ணொருவர் மாயம்!!

missing

கடந்த 05.11.2021 அன்று முல்லைத்தீவு – நாயாறு பகுதியில் இருந்து வவுனியாவுக்குச் சென்ற நாயாறு பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயைக் காணவில்லையென கணவனால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவகுமார் ஜெயந்தி எனும் 42 வயதுடைய பெண்ணே இவ்வாறு இன்று வரை வீடு திரும்பாத நிலையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் மூன்று பிள்ளைகளும் தாயை காணாது தவித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர் தன்னுடைய மனைவி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக தனது 0765350421 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் தருமாறும் கோரியுள்ளார். இதேவேளை பொலிஸார் தனது மனைவியை தேடித்தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்15 வயதுடைய ஆண் மகன் மற்றும் 12 வயதுடைய மகள் மற்றும் 7 வயதுடைய மகள் ஆகியோர் தாயை காணாது மிகுந்த சோகத்தில் வாடுகின்றதாகவும் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button