உலகம்செய்திகள்முக்கிய செய்திகள்

வடகொரியா விடுத்துள்ள எச்சரிக்கை!!

North Korea

அமெரிக்கா – தென் கொரியா இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் மோசமான ஆபத்தை உருவாக்கும் என வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென் கொரியாவில் அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த அமெரிக்கா சமீபத்தில் ஒப்புக்கொண்டது. 

மேலும், வட கொரியாவின் அணுசக்தி அச்சுறுத்தலை தென் கொரியா எதிர்கொள்ள அந்நாட்டை அணு ஆயுத திட்டத்திலும் அமெரிக்கா ஈடுபடுத்தி வருகின்றது. 

தென் கொரியா – அமெரிக்கா இடையேயான இந்த ஒப்பந்தம், இவ்வாரம் வாஷிங்டனில் ஜனாதிபதி ஜோ பைடன், தென் கொரிய பிரதிநிதி யூன் சுக்-யோல்ஸு இடையே இடம்பெற்ற சந்திப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வட கொரிய ஜனாதிபதி கிம்-மின் சகோதரி கிம் யோ ஜாங் தெரிவிக்கையில், 

கொரிய தீபகற்பத்தின் அருகே அணு ஆயுதங்களை எதிரிகள் எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்துகிறார்களோ, அந்த அளவுக்கு வட கொரியாவின் தற்காப்பு நடவடிக்கைகளும் அதிகரிக்கும். எதிரிகளின் நடவடிக்கையானது வட கிழக்கு ஆசியா மற்றும் உலகத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பில் இன்னும் மோசமான ஆபத்தை உருவாக்கும்’ என்று அவர் எச்சரித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button