இலங்கைசெய்திகள்

கராஜ் போய்ஸ் நண்பர்கள் அமைப்பினரால் உதிவித்திட்ட நிகழ்வு முன்னெடுப்பு

வாழ்வாதாரத்தில் பின்தங்கிய தாயகத்தைச் சேர்ந்த உறவுகளுக்கு உதவித்திட்டங்ளை மேற்கொண்டுவரும் கனடா கராஜ் போய்ஸ் நண்பர்கள் அமைப்பினரால் மட்டுவில் தெற்கை நிரந்தர முகவரியாகவும் புதுக்குடியிருப்பை வதிவிடமாகவும் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு உதவித்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

புதுக்குடியிரும்பு 10 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சர்வேஸ்வரனாந்தன் சுரேஸ்குமார் என்பவருக்கே சுயதொழிலை மேற்கொண்டு வாழ்வாதரத்தை மேம்படுத்தும் நோக்கில் பிள்ளையார் ஸ்ரோர் என்னும் விற்பனை நிலையத்தை அமைத்து கையளிக்கும் நிகழ்வு நாளை (01) இடம்பெறவுள்ளது.

கராஜ் போய்ஸ் நண்பர்கள் அமைப்பின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் இ.ஜனதன் தலைமையில் நாளை காலை 10.00 மணியளவில் இந்நிகழ்வு இடம்பெற உள்ளது.

இவ் உதவித்திட்டம் கராஜ் போய்ஸ் நண்பர்கள் அமைப்பின் 3 இலட்சத்து 50 000 ரூபா நிதிப்பங்களிப்பில் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button