11 அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலைகளை நிர்ணயிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
சீனி, பருப்பு, மா, வெங்காயம், உருளைக்கிழங்கு, பதிவு செய்யப்பட்ட மீன், பால் மா, உலர்ந்த நெத்தலி, காய்ந்த மிளகாய் மற்றும் கடலை ஆகியவை அடங்கலாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.