இலங்கைசெய்திகள்

கோட்டா தலைமையிலான ஆட்சியில் சமையல் அறைக்கு கூட பாதுகாப்பில்லை – அநுர!!

Anurakumara Dissanayake

“தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன் எனக் கூறியே கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தார். ஆனால், இன்று வீட்டுக்குள் சமையல் அறைக்குக் கூடப் பாதுகாப்பாக சென்றுவர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.”

  • இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

ஜே.வி.பியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மக்கள் மத்தியில் தற்போது உருவாகியுள்ள அச்சம் நீக்கப்பட வேண்டும். அதற்காக அரசு துரிதமாகச் செயற்பட வேண்டும். மாறாக குழுக்களை நியமித்து காலத்தை இழுத்தடிக்கக்கூடாது” – என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button