இலங்கைசெய்திகள்

தீப்பரவல் – 20 சம்பவங்கள் பதிவு!!

cylinder

கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயுடன் தொடர்புடைய 20 தீப்பரவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது போன்ற சம்பவங்கள் மாத்தறை – நாவிமன, மீகொட, அத்துருகிரிய, மீரிகம, அம்பலாங்கொட, கடவத்தை, தியத்தலாவ, கொள்ளுப்பிட்டி, களுத்துறை, கெக்கிராவ உள்ளிட்ட பல பிரதேசங்களில் இருந்து பதிவாகியுள்ளன.

இதனையடுத்து, சமையல் எரிவாயுடன் தொடர்புடைய தீப்பரவல்கள் அல்லது வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்கும் அதுகுறித்த தீர்வினை வழங்குவதற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button