இலங்கைசெய்திகள்

சி.டி.விக்ரமரத்னவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை!!

C.D.Vikramaradna

போதிய புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் சாட்சியமளிப்பதற்காக, பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்னவை எதிர்வரும் 29ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (26) கொழும்பு மேல் நீதிமன்றில் நாமல் பலல்லே, ஆதித்ய படபெந்திகே மற்றும் மொஹமட் இர்ஷதீன் ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீதிபதிகள் குழாம், சி.டி.விக்ரமரத்னவை எதிர்வரும் 29ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை வௌியிட்டு உத்தரவிட்டனர்.

Related Articles

Leave a Reply

Back to top button