கனடா, சுவிஸ், லண்டன், டென்மார்க், அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் நண்பர்களின் கூட்டுமுயற்சியான கராஜ் போய்ஸ் நண்பர்கள் வட்டம் அமைப்பின் ஒழுங்கமைப்பில் ‘சிறு துளி பெரு வெள்ளம்’ என்ற கருவை மையமாகக் கொண்டு சமூகத்தை முன்னேற்றும் நோக்கில் தாமாகவே முன்வந்து வழங்கும் உதவிச்
செயற்றிட்டத்தின் 6வது திட்டமாக மோகன் தேய்காய் எண்ணெய் சேவை உற்பத்தி நிலையம் என்ற வாழ்வாதார வியாபார முயற்சி நாளை { 14. 08.2022} ஞாயிற்றுக்கிழமை மட்டுவில் தெற்கு கிராமத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
முதல் நிகழ்வாக 1 நிமிட மெளனப் பிராத்தனை இடம்பெற்று அடுத்து மங்கள விளக்கேற்றல் நடைபெறும்.
இதனைத்தொடர்ந்து செயற்திட்ட இணைப்பாளரின் வரவேற்பு உரையும் செயற்திட்ட விளக்கமும் இடம்பெறவுள்ளது.
தொடர்ந்து , பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்து திறந்துவைக்கப்பட்டு நாடாவெட்டி திறக்கப்பட்டு, உதவி பெறும் பயனாளியால் பயனாளியின் கணவரின் படத்திற்கு மாலை அணிவிக்கப்படும்.
தொடர்ந்து நாள் வியாபாரம், மரக்கன்று வழங்கல், முன்னாள் பயனாளி சார்பான உரை, வியாபார ஒழுக்கம் சாரபான உரை , மரக்கன்று நடுதல் என நிகழ்வுகள் தொடரவுள்ளன.
இந்த சமூக முன்னேற்ற நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் அழைத்து நிற்கின்றனர்.